search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திமுக ஆலோசனை கூட்டம்"

    குமரி கிழக்கு மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் பாராளுமன்ற பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நாளை நடக்கிறது என்று சுரேஷ்ராஜன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
    நாகர்கோவில்:

    குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அறிவுரைபடி குமரி கிழக்கு மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் பாராளுமன்ற பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நாளை (18-ந் தேதி) மாலை 4 மணிக்கு நடக்கிறது.

    குளச்சல் நகரம், தக்கலை ஒன்றியம், குருந்தன்கோடு கிழக்கு ஒன்றியம், மேற்கு ஒன்றியம், தோவாளை ஒன்றியம், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றியங்களில் இந்த கூட்டம் நடக்கிறது. தலைமை கழகத்தால்  நியமிக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் கருணாநிதி, கிரி ஆகி யோர இந்த கூட்டங்களில் பங்கேற்று பேச உள்ளனர். ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் கூட்ட ஏற்பாடுகளை செய்து இதில் பங்கேற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    நாமக்கல் கிழக்கு மாவட்டம் நாமக்கல் நகர தி.மு.க. சார்பில் நாடாளுமன்ற தொகுதி ஆலோசனைக்கூட்டம் நாளை நடக்கிறது.
    நாமக்கல்:

    நாமக்கல் கிழக்கு மாவட்டம் நாமக்கல் நகர தி.மு.க. சார்பில் நாடாளுமன்ற தொகுதி ஆலோசனைக்கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) மதியம் 12 மணிக்கு நாமக்கல் உழவர் சந்தை அருகில் உள்ள கவின்கிஷோர் திருமண மண்டபத்தில், மாவட்ட கழகப் பொறுப்பாளரும், மத்திய முன்னாள் இணை அமைச்சருமான காந்திசெல்வன் தலைமையிலும், 

    நாடாளுமன்ற தொகுதிபொறுப்பாளர்களான, முன்னாள் அமைச்சரும், கழக சொத்து பாதுகாப்புக்குழு துணைத்தலைவருமான பொங்கலூர் பழனிசாமி, முன்னாள் சட்டபேரவை உறுப்பினரும், கழக தேர்தல் பணிக்குழு செயலாளருமான பார்த்திபன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற உள்ளது. 
    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பல்பாக்கி ஊராட்சி தி.மு.க பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பல்பாக்கி ஊராட்சி தி.மு.க பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் ஊராட்சி அவைத்தலைவர் ராஜாமணி தலைமையில் பல்பாக்கி சமுதாய கூடத்தில் நடைபெற்றது.

    இதில் ஊராட்சி பொருப்பாளர் செந்தில் குமரன் வரவேற்றார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மதிவாணன், ஒன்றிய துணை செயலாளர் மணி, ஒன்றிய பொருளாளர் ரமேஷ்குமார், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வடக்கு ஒன்றிய செயலாளர் குப்புசாமி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அருண்பிரசன்னா, தெற்கு ஒன்றிய தலைவர் சுப்பிரமணி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினர்.

    இதில் 5 முறை முதல்வராகவும். 50 ஆண்டுகள் பொது வாழ்வில் இருந்து தி.மு.க வை கட்டிக்காத்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி செலுத்துவது, பதினான்கு வயதில் இருந்து பொதுவாழ்வில் இருந்து பல முறை சிறை சென்று தி.மு.க வில் பல்வேறு பதவிகளை அடைந்து தற் போது தி.மு.க தலைவராக பொறுப்பேற்றுள்ள தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு ஊராட்சி கழகம் சார்பில் வாழ்த்து தெரிவிப்பது, ஆளும் அ.தி.மு.க ஊழல் அரசை கண்டித்து வருகிற 4-ந் தேதி ஓமலூர் பேருந்து நிலையத்தில் நடைபெறும் கண்டன பொதுக் கூட்டத்திற்கு பல்பாக்கி ஊராட்சி கழகத்தில் இருந்து 200 பேர் கலந்து கொள்வது என்பன போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதில் நிர்வாகிகள் பாலசுப்பிரமணி, ஜெயவேல், சதாசிவம், மற்றும் கிளை நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் தி.மு.க. ஒன்றிய ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. கூட்டத்தில் கருணாநிதி பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் தி.மு.க. ஒன்றிய ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. முன்னாள் அவைத்தலைவர் கிருஷ்ணன் தலைமையில் தொடங்கிய கூட்டத்தில் ஜெரீனாக்காடு கிளை செயலாளர் குணசேகரன் அனைவரையும் வரவேற்றார். ஒன்றிய செயலாளர் ஏ.டி.பாலு பேசியதாவது:-

    வருகிற 3-ந் தேதி கழக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் அனைத்து கிளைகளிலும் விமர்சையாக கொண்டாடப்பட வேண்டும், அங்குள்ள கொடிகம்பங்களில் கொடியேற்றி மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட வேண்டும், மேலும் வருகிற 17-ந் தேதி ஏற்காட்டில் கருணாநிதி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தை சிறப்பாக நடத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். ''

    இவ்வாறு அவர் பேசினார். 

    கூட்டத்தில் கட்சியை சேர்ந்த கிளை செயலாளர் ராஜேந்திரன், ஒன்றிய துணை செயலாளர்வெங்கடாசலம், ஒன்றிய இளைஞரணி செயலாளர் சிவா, அவை தலைவர் சின்னதம்பி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    ×